spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் சிம்பு படம்... மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்...

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சிம்பு படம்… மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்…

-

- Advertisement -
கோலிவுட்டின் லிட்டல் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுவர் நடிகர் சிம்பு. சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். அப்பாவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிம்பு இன்று வரை கோலிவுட்டில் தனக்கான இடத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நடிப்பு, நடனம், பாடல் என பன்முகத்திறமை கொண்ட சிம்புவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, உடல் எடை பருமன் என பல விமர்சனங்களையும், சிக்கல்களையும் சந்தித்த நடிகர் சிம்பு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார். பிறகு ஈஸ்வரன் படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தார் சிம்பு. சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் ஹிட் அடித்தன.

தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடி்தது வருகிறார். இது சிம்புவின் 48-வது படமாகும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், 90 சதவிகித படப்பிடிப்பு செட் போட்டு தான் நடைபெற உள்ளது. வரலாற்று திரைப்படம் என்பதால், பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ