கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக வைக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் சமூக போராட்டத்தினை நினைவு கூறும் வகையில் தமிழ் தமிழ்நாடு அரசின் சார்பில் இப்பகுதியில் நினைவக கட்டிடம் 70 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நினைவகத்தில் 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டிடமும் 84.20 சதுர மீட்டர் நூலக கட்டிடமும், சிறுவர் விளையாட்டு பூங்காவும், இரு பாலருக்கான கழிவறை கட்டிடமும், இவ்வளாகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும் தந்தை பெரியார் அமர்ந்த நிலையில் உள்ள திருவுருவச் சிலையும் அமையப்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியார் அவர்களை சந்தித்த தலைவர்கள் ஆகிய புகைப்படங்களும் தமிழ்,மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரியார் அவர்கள் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை (செப்டம்பர்- 17)சமூக நீதி நாளாக அறிவித்ததை அடுத்து, இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து 1984 ஆம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் வருடத்தில் திறப்பு விழா செய்யப்பட்ட இந்நினைவகத்தினை புதுப்பொழிவு ஏற்படுத்தும் வகையில் இந்நினைவாக கட்டிடத்தினை புனரமைக்கும் பணி மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில், இன்று (23.01.2023) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆகியோர் நேரில் இந்நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலருக்கு அறிவுறுத்தினர். இவ்வாய்வின்போது இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணை செயலாளர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திரு விஸ்வநாதன், மண்டல தலைமை பொறியாளர் இளஞ்செழியன், கண்காணிப்பு பொறியாளர் சத்திய வாகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தார்.
