

சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொரட்டூர் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.
அயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தால் புதிய சர்ச்சை
இதையடுத்து, அம்பத்தூர் தீயணைப்பு நிலைய முதன்மை அலுவலர் நாகராஜ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் ஏரியில் இறங்கி அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த கொரட்டூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். யாரேனும் கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசினார்களா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் பேசினால் என்ன தவறு? – கீர்த்தி பாண்டியன் கேள்வி

அத்துடன், ஏரி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுச் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொரட்டூர் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


