காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நடித்துக் கொண்டு இருப்பவர் யோகி பாபு.
நகைச்சுவையில் முன்னணியாகவும் இருக்கிறார். இதற்கு முன்பு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்தபடங்கள் அனைத்திலுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.
தற்பொழுது அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ”பொம்மை நாயகி”.
இயக்குனர் பா ரஞ்சிதின் நீலம் ப்ரொடக்ஷன் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மகளுக்கும் தந்தைக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் அதை எப்படி எதிர்கொள்ளும் அந்த தந்தையின் போராட்டம் மற்றும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை சொல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முக்கிய வேடத்தில் சுபத்ரா ஹரி, ஜி .எம் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்
யோகி பாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்துள்ளார்.
அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்ய கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்க கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியவர்கள் பாடல் எழுதியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது.