Homeசெய்திகள்தமிழ்நாடுவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை- பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை- பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி

-

- Advertisement -

வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhayanidhi stalin tn assembly

we-r-hiring

சென்னை மாவட்ட கை பந்து சங்கம் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கை பந்து சாம்பியன் ஷிப் போட்டியை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இப்போட்டி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் சென்னை அருகம்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி இடையேயான போட்டியை உதயநிதி தொடங்கி வைத்தார்

போட்டியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “25 வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் அப்போதே என்னை நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணி அழைத்து சென்று விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆனால் தற்போது நான் விளையாட்டுத்துறை அமைச்சராகவே ஆகிவிட்டேன். 100 அணிகள் தான் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளது. நம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை விட இங்கு வந்து உள்ளவர்கள் குறைவு தான், கைப் பந்து போட்டியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கைப்பந்தை இந்திய அளவில் கொண்டு சேர்த்தவர் சிவந்தி ஆதித்தனார்.

கைப்பந்து போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 4 வீரர்கள் தேசிய அளவில் விளையாடி கொண்டு உள்ளனர். உயரமானவர்கள் மட்டுமே விளையாடும் போட்டியாக இருக்கும் இந்த கைப்பந்து போட்டியை, மாணவர்கள் நல்ல உயரத்திற்கு கொண்டு வர வேண்டும். விளையாட்டு வீரர்கள், தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நம் மாநிலத்தின் விளையாட்டு பட்ஜெட் குறைவு தான், அதை அதிகரித்து தர சொல்லி நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. பங்கு பெறுவது தான் முக்கியம் அதில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று உள்ளீர்கள்” என்றார்.

MUST READ