தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 66.
தமிழ் திரைதுறையில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ், ராஜா ராஜா தான், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.


அது மட்டுமல்லாமல் ஏராளமான படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பன்முக திறன் கொண்ட இவர், வசூல் ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், மாரி உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் உடல் நல குறைபாடு காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் மாரடைப்பு காரணமாக ஈ.ராமதாஸ் உயிரிழந்தார்.

ஈ.ராமதாசின் மகன் கலைச்செல்வன் கூறியதாவது,
கே.கே நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஈ.ராமதாசின் உடல் காலை 11 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர் மாலை 5 மணி அளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


