Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிபெல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?பிரபல இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ் , தற்போதைய கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதே சமயம் தங்கலான் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு படத்தில் இசையமைக்க இருக்கிறார். இவ்வாறு பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இடி முழக்கம், கள்வன், கிங்ஸ்டன், டியர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரிபெல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து மமிதா பைஜூ, சுப்ரமணிய சிவா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரிபெல் படத்தின் ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்க போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை அறிவித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ