spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'SK21' படத்தின் ரிலீஸ் எப்போது.... அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

‘SK21’ படத்தின் ரிலீஸ் எப்போது…. அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

'SK21' படத்தின் ரிலீஸ் எப்போது.... அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது.

அதேசமயம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி தரும் SK21 படத்தில் நடித்த வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி SK21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருகிறது.'SK21' படத்தின் ரிலீஸ் எப்போது.... அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

we-r-hiring

அதே சமயம் அயலான் படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் ஈவென்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் SK21 படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி இப்படம் 2024 கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறியிருக்கிறார். மேலும் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். எனவே ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ