- Advertisement -
ஒரிசாவில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் கஞ்சாவை கடத்திய நபரை போலீஸ்சார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பூரி எக்ஸ்பிரஸில், சென்னை சென்ட்ரல் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதில் சந்தேகத்துக்கிடமாக தெரிந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ராபி நாயக் என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது, அவர் 900 கிராம் கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


