spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவின் பன்முக தன்மை என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திடுவோம் - உதயநிதி ஸ்டாலின்!

இந்தியாவின் பன்முக தன்மை என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திடுவோம் – உதயநிதி ஸ்டாலின்!

-

- Advertisement -

இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் – பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் இன்று கலந்து கொண்டோம். தமிழ்நாடு அரசின் சாதனைகளை துறைவாரியாக விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பார்வையிட்டோம்.

பொய்ச்செய்திகளுக்கு எதிரான ஆல்ட் நியூஸ் தளத்தை நடத்தி வரும் முகமது ஜூபேர் அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, அரசுப்பள்ளிக்கு தன்னுடைய நிலத்தை வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகளை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் – பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ