- Advertisement -
மறைந்த பவதாரிணியின் உடலை சென்னை கொண்டு வர, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இலங்கை புறப்பட்டார்.

இசை எனும் சாம்ராஜ்யத்தின் ஆளும் மாபெரும் மன்னன் இளையராஜா. இசைஞானி என இந்தியா முழுவதும் அழைக்கப்படும் அவர் இதுவரை ஆயிரக்கணக்கில் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான படங்களில் பாடி இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 1984-ம் ஆண்டு பிறந்தவர் மகள் பவதாரிணி. அவருக்கு வயது 47 ஆகும். மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரியான அவர், ராசய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி இருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாடகியாகவும் அறிமுகம் ஆனார்.


பின்னர் பின்னணி பாடகியாகவே தனது திரைவாழ்வை பின்தொடர்ந்தார். அடுத்து மித்ரு, மை பிரெண்ட் படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து தனுஷ் நடித்த அனேகன் படத்தில் ஆத்தாடி ஆத்தாடி என்ற பாடலை பாடினார். இப்பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம். கடந்த 2001-ம் ஆண்டு மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதும் பெற்றார்.



