spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை லாவகமாக திருடிய பெண்

படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை லாவகமாக திருடிய பெண்

-

- Advertisement -

சின்னத்திரை படப்பிடிப்பின்போது நடிகரின் செல்போன் பெண் ஒருவர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் கதாநாயகனாகவும், துணை நடிகராகவும் நடித்து புகழ் பெற்றவர் அழகப்பன்.

we-r-hiring

கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “ஆனந்த ராகம்” தொடருக்கான படப்பிடிப்பு சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் ஷூடிங் நடந்து வந்தது.

அப்போது ஹீரோவான அழகப்பனின் செல்போன் அங்குள்ள ஒரு டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்தது.

அதனை கடைக்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளர் துணியை பார்ப்பது போல் பார்த்து டேபிள் மேல் இருந்த செல்போனை  லாவகமாக  எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் துணி கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தனது செல்போனை மீட்டு தரக் கோரி சீரியல் நாயகன் அழகப்பன் திருவிக நகர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

MUST READ