spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’…. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் ப்ரதர், ஜன கன மன, ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல படங்கள் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கிய சைரன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோரும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கப் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதே சமயம் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியானது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி நடிக்கும் 'சைரன்'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!அதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நேற்று வரை எனும் முதல் பாடல் நாளை மாலை 4.45 மணி அளவில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த பாடலை தாமரை எழுதியுள்ள நிலையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ