எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. அஜித்தின் 62 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் AK62 படத்தை மகிழ் திருமேனி கையில் எடுத்துள்ளார். மகிழ் திருமேனி, தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக அஜித் நடிப்பில் இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக நிலவி வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் , ரெஜினா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. முழு படத்தையும் அஜர்பைஜானில் முடித்து விட மகிழ் திருமேனி திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு காலநிலை மாற்றத்தால் பனிப்பொழிவு ஏற்படுவதால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை வேறு ஒரு இடத்தில் படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வேறொரு லொகேஷனை பட குழுவினர் பார்த்து வருவதாகவும் , விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் முடிய உள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் அஜித், மற்ற படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.