சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே கிடைக்காது. ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற செய்ய முடியாது. பழனிசாமியின் எதேச்சதிகார போக்கால் அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துவிடும். அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தல் தொடர்பாக பெரும் தடுமாற்றம் நிலவுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை வலிமைப்படுத்தி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளோம்.ஓபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என கூறியுள்ளேன்.
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சிதறாமல் உள்ளது,அதிமுக சிதறி உள்ளது. எடப்பாடியின் எதேச்சதிகாரப் போக்குக்கு இடைத்தேர்தலில் பதில் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமியை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள், வாக்குகள் எதிராக திரும்பும் போது ஈபிஎஸ் திருந்துவார்.ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே கிடைக்காது. எடப்பாடி பழனிசாமியை வாக்காளர்களும் நிராகரிப்பார்கள்” என்றார்.
