இடைவெளிக்கு பின் சினிமா பக்கம் திரும்பிய சமந்தா… டப்பிங் பணி தீவிரம்…
- Advertisement -

கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் ஒருவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது சமந்தாவுக்கு தான். தமிழில் விண்ணைத்தாண்டிய வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று ஒட்டுமொத்த திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா, மற்றும் சாகுந்தலம் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆனால், குஷி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சமந்தா இடைவெளி எடுத்துக் கொண்டார். சினிமாவில் கனவம் செலுத்தி வந்தவருக்கு மையோசிடிஸ் எனும் தடை குறைபாட்டு நோய் ஏற்பட்டது. இதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். பிசினஸ், ஆன்மிக பயணம், சுற்றுலா, தயாரிப்பு நிறுவனம் என சமந்தா பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையே சமந்தா நடித்துள்ள சீரிஸ் தான் சிட்டாடெல் இந்தியா. ஆங்கிலத்தில் வெளியான தொடர் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில், சமந்தா மற்றும் வருண் தவான் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பேமிலி மேன் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே கூட்டணி இந்த தொடரை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, நடிகை சமந்தா நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார். தற்போது அவர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறார். அந்த தொடருக்கான டப்பிங் பணிகளில் சமந்தா ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.