தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இவர் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தனுஷ், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தாராவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள தாராவி எனும் குடிசை வாழ் பகுதியை சுற்றி நடக்கும் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகிறது. சில தினங்களுக்கு முன்பு பட குழுவினர் வெளியிட்ட புகைப்படங்களை பார்க்கும்போது தனுஷ் வித்தியாசமான லுக்கில் இப்படத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது. எனவே சேகர் கம்முலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழியினரையும் கவரும் விதத்தில் மிக பெரிய பான் இந்திய படமாக உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.