spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?"- முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்!

“இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?”- முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக வருகை ரத்து!
Photo: CM Nitish Kumar

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

we-r-hiring

ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ்வர்’….. முதல் விமர்சனம் இதோ!

முதலமைச்சர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “எந்த கட்சி எவ்வளவு சீட்களில் போட்டியிடும் என இதுவரை அவர்கள் முடிவு செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை வைக்கக் கூறினேன். இந்தியா கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன்; ஆனால் அவர்கள் அந்த பெயரை முடிவுச் செய்தனர்.

இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினேன். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை வைக்க கூறினேன். பீகார் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கூட்டணியில் இருந்து விலக்கியதற்கு தொகுதி பங்கீடு தான் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர்… உண்மையை உடைத்த பிரபல நடிகர்…

அண்மையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ