- Advertisement -
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகி நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்திந்திய மொழிகளிலும் அவர் ஒரு ரவுண்டு வருகிறார். அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

சினிமா மட்டுமன்றி தொழில் நிறுவனங்களை தொடங்குவதிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அடுத்து லிப் பாம் கம்பெனி, சாய் வாலா என அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். மேலும், தற்போது நயன் ஸ்கின் என்ற நிறுவனத்தையும் நயன்தாரா தொடங்கி உள்ளார். இறுதியாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது.




