spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு!

-

- Advertisement -

 

ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு!

we-r-hiring

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டார்.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அதைத் தொடர்ந்து, அவரிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஹேமந்த் சோரன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, ஹேமந்த் சோரனின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ஜே.எம்.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்த நிலையில், சம்பாய் சோரன் ஒருமனதாக முதலமைச்சராகத் தேர்வுச் செய்யப்பட்டார். அதேபோல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பாய் சோரனை முதலமைச்சராகத் தேர்வு செய்து ஆதரவு கடிதத்தையும் வழங்கியுள்ளனர்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராக இருப்பவர் சம்பாய் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ