spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபட்டையை கிளப்புகிறார் பாலிவுட் பாட்ஷா

பட்டையை கிளப்புகிறார் பாலிவுட் பாட்ஷா

-

- Advertisement -

பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான்.

பல விமர்சனங்களை தாண்டி ஷாருக்கான் நடித்த ”பதான்” திரைப்படம் படம் இன்று வெளிவந்துள்ளது.

we-r-hiring

இப்படம் உலகெங்கும் 7500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.

சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளி வருகிறது ”ஷாருக் கான்” படம். இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், ஆரவாரத்துடனும் தியேட்டர்களில் படம் பார்த்து தங்களின் விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

“சித்தார்த் ஆனந்த்” இப்படத்தை இயக்கியுள்ளார்.

“தீபிகா படுகோன்” ஷாருக்கானுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

“ஜான் ஆபிரகாம்” இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருடைய படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் ஷாருக்கானுக்கு இப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்டாகவும்,  மைல்கள்ளாகவும் அமைந்துள்ளது.

மேலும், இப்படத்தின் பாடல் ஒன்று படம் திரைக்கு வரும் முன்னே வெளியாகி பெறும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

MUST READ