spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெரிய சம்பவம் லோடிங் ......வைரலாகும் விஷ்ணு விஷாலின் ட்வீட்!

பெரிய சம்பவம் லோடிங் ……வைரலாகும் விஷ்ணு விஷாலின் ட்வீட்!

-

- Advertisement -

பெரிய சம்பவம் லோடிங் ......வைரலாகும் விஷ்ணு விஷாலின் ட்வீட்!நடிகர் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால் ராட்சசன் என்ற படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஆர்யன், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதன்படி விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்தும் வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக கூட விஷ்ணு விஷால் அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், கட்டாகுஸ்தி பட இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதேசமயம் அப்படங்களை தானே தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், பிரபல பாடலாசிரியரும் நடிகரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “பெரிய சம்பவம் லோடிங்” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இயக்குனர் அருண்ராஜா காமராஜ், கனா நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான லேபில் என்ற வெப் தொடரையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ