சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்ற வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆளும் பாஜகவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர் நடவடிக்கையாக சமூக வலைதளங்களில் இருந்து பிபிசியில் ஆவணப்படம் நீக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இதற்கு தடையும் விதித்தனர்.
இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் பிபிசி ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. எஸ்.எஃப்.ஐ. அமைப்பு சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை இன்று திரையிட திட்டமிட்டிருந்தனர். குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை திரையிட தொடரும் எதிர்ப்பு காரணமாக படத்தை திரையிட முயன்ற நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிபிசி ஆவணப்படம் குறித்து உயர்கல்வித்துறை பொதுவான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
