சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும் தங்களுக்கான தனித்தொழிலை தொடங்கி தொழிலதிபராகவும் வலம் வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் 9 ஸ்கின் என்ற அழகு சாதன நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் நாப்கின்ஸ் தொழிலையும் நடத்தி வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரசன்னாவின் மனைவியும் பிரபல நடிகையுமான
சினேகா இணைந்துள்ளார். நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை தியாகராய நகரில் சினேகாலயா சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடையை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த கடையின் திறப்பு விழா வருகின்ற பிப்ரவரி 12ஆம் தெறி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரை பிரபலங்களும் சினேகாவின் ரசிகர்களும் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை சினேகா, கமல், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடைசியாக வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்திருந்தார் சினேகா. தற்போது வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் The Greatest Of All Time படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.