

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கப்போவது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே, டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளன.
ஜப்பான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே. சூர்யா!
அதில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும், தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என்று இந்தியா டுடே- சி வோட்டர் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் காங்கிரஸ் 22 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 24 மக்களவைத் தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணி வெல்லும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளையும், பா.ஜ.க. கூட்டணி 22 தொகுதிகளையும் கைப்பற்றும்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 32 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 8 தொகுதிகளிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிக்கும் ‘ஃப்ரீடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 303 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும்; காங்கிரஸ் கூட்டணி 71 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
