சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். அதன் பிறகு நடிப்பதிலும் ஆர்வம் உடைய சசிகுமார், சுந்தரபாண்டியன், நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் அயோத்தி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சசிகுமார் நா நா, எவிடென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சூரி கதாநாயகனாக நடிக்கும் கருடன் திரைப்படத்திலும் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் சசிகுமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சசிகுமாரின் அடுத்த படமான ஃப்ரீடம் AUGUST 14 என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சத்ய சிவா இயக்குகிறார். இப்படத்தை விஜய ஞானபதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போஸ்டரில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.