spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனுக்காக மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!

அல்லு அர்ஜுனுக்காக மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!

-

- Advertisement -

அல்லு அர்ஜுனுக்காக மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வில்லனாகவும் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இருந்த போதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த பேட்டியில் விஜய் சேதுபதி, எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தாலும் ஹீரோவுக்காக அந்த காட்சிகள் எடிட் செய்யப்படுவதால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். எனவே மகாராஜா, ட்ரெயின், VJS 51 ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அல்லு அர்ஜுனுக்காக வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அல்லு அர்ஜுனுக்காக மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!அதைத்தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பகத் ஃபாஸில் நடித்து வருகிறார். புஷ்பா தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் இயக்குனர் சுகுமார் புஷ்பா 3 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி புஷ்பா 3 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் புஷ்பா 3 படத்தின் படப்பிடிப்பு 2026 இல் தொடங்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ