Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- ஈபிஎஸ் இரண்டாவது நாளாக ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தல்- ஈபிஎஸ் இரண்டாவது நாளாக ஆலோசனை

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நிறுப்பட உள்ள வேட்பாளர் தேர்வு குறித்து ஈரோடு அருகே செங்கோடம்பாளையத்தில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

edappadi palanisamy

we-r-hiring

இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், செம்மலை , மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா, தாமாக பொதுச்செயலாளர்
விடியல் சேகர் மற்றும் அதிமுக ஈரோடு நகர பகுதி செயலாளர்கள் , நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். காலை 10.30 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவினை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததோடு தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் , தொகுதியில் எந்தெந்த இடங்களில் யார், யார் பணியாற்ற வேண்டும் என பிரித்து பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. திங்கட்கிழமை வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ