ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தனியார் மண்டபத்தில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.


நிர்வாகிகள் உடனான ஆலோசனையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சிலர் சிலருடன் சேர்ந்து எட்டப்பன் வேலைப் பார்த்து வருகிறார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுவோருக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியமானது, நமக்கு சோதனை புதிதல்ல. உழைப்பும், தியாகமும் தான் நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
உழைப்பு, தியாகம் இருந்தால்தான் நமக்கு வெற்றி கிடைக்கும். நம் சரியான முறையில் உழைத்தால் நமக்கு வெற்றி. வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. உடல்நிலை சரியில்லாதவர்களை வைத்து வேலை பார்க்க வேண்டாம். அவர்களால் நமக்கும் பிரச்சனை, அவர்களுக்கும் பிரச்சனை” எனக் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாரை களமிறக்கலாம் என்பது குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால் அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
