ஈரோடு கிழக்கு(98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தப்படி அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இடைத்தேர்தலில் த.மா.க போட்டியிட விருப்பம் இல்லை என அக்கட்சியின் தலைவர் ஜி. கே.வாசன் அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அதிமுக சார்பில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக-வானது ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு பிரிவுகளாக பிரிந்து உள்ளது.
ஈரோடு கிழக்கு(98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு. pic.twitter.com/Be7PUdu5A4
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 27, 2023
இடைத்தேர்தல் ரேசில் இருந்து பாமக விலகிய நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் A.M. சிவபிரசாந்த் வேட்பாளராக களமிறக்கப்படுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவ்இத்துள்ளார்.
