Homeசெய்திகள்சினிமாதளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி.....'தலைவர் 171' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

-

- Advertisement -

தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி.....'தலைவர் 171' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி.....'தலைவர் 171' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் ரஜினி, தளபதி படத்தின் லுக்கில் டி ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளமையாக காட்டப்பட இருக்கிறார். தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி.....'தலைவர் 171' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கப்படும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு ஏப்ரல் 12ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்றால் ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ