நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் ராசா கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு மணிகண்டனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. அதைத் தொடர்ந்து குட் நைட் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் மணிகண்டன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் மணிகண்டனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ரொமான்டிக் காதல் டிராமாவாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஐந்து நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதே சமயம் லவ்வர் படம் நல்ல வசூலையும் பெற்றுத் தருகிறது. இனிவரும் நாட்களிலும் இப்படம் அதிக வசூலை பெற்று தரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் லவ்வர் படத்தின் வெற்றியை பட குழுவினர் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- Advertisement -