கடந்த 1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது.
இருப்பினும் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. இருந்த போதிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 3 படமும் உருவாகி வருகிறது. அதன்படி 2024 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் (பிப்ரவரி 21) நாளை இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறதாம். அதாவது சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் பாடல் ஒன்று படமாக்கப்பட இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -


