Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

-

- Advertisement -

சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

mkstalin

we-r-hiring

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடம் கட்டப்பட்டு, புனர்வாழ்வு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் விலையில்லா செயற்கை கை, கால்களை பயணாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டைகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களான கை, கால் பெறும் போது குறைந்தபட்ச கட்டணம் கூட இல்லாமல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இனி, கேகே நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் செயற்கை கை, கால் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக முதல்வர் உயர்த்தி வழங்க அறிவித்தார். இந்த மாதம் முதல் அவை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனால் 21 வகையான 4 லட்சம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடுமையான பாதிப்புள்ள 2 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயனடைய உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

MUST READ