சாக்லேட் குக்கீஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் பவுடர் – கால் கப்
வெண்ணெய் – 3 ஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் – 2 ஸ்பூன்
பிரவுன் சுகர் – 2 ஸ்பூன்
பால் – கால் கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

பாதாம் பவுடர் செய்யும் முறை:
தேவையான அளவு பாதாம் எடுத்து அதனை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் பாதாமை இரவு முழுவதும் காய வைத்து காலையில் மிக்சியில் அரைத்து பொடி ஆக்கிக் கொள்ள வேண்டும். இன் பிடித்து வைத்த பாதாம் பவுடரை காற்று போகாத பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும்.
சாக்லேட் குக்கீஸ் செய்முறை:
சாக்லேட் குக்கீஸ் செய்ய ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சுகர், வெண்ணிலா எசன்ஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதில் பாதாம் பவுடரை சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக அதனுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து விருப்பமான வடிவில் குக்கீஸ்களாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இதனை ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.
சில மணி நேரங்கள் கழித்து குக்கீஸ்களை பரிமாறலாம்.
குட்டீஸ்களுக்கு பிடித்த சுவையான சாக்லேட் குக்கீஸ் தயார்.