தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜூம் ஒருவர். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.


விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்து நல்ல வசூலை தந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன் மற்றும் மிஷ்கின் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தில் முதன்முறையாக நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பற்றி இப்படத்தின் இயக்குநரான லோகேஷிடம் கேட்டபோது, ”ஆமாம் நானும் கேள்விப்பட்டேன்! என்று சொல்லி ஒரு புரியாத புதிரான பதில் அளித்துள்ளார்.

மீண்டும் படத்தில் விக்ரம் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டபோது ”கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் அறிவிப்பு வெளிவரும் இப்போதே சொல்லிவிட்டால் சர்ப்ரைஸ் போய்விடும்” என்று சொல்லி நழுவிட்டார் இயக்குநர் லோகேஷ். இவரின் இந்த குழப்பமான பதிலால் விஜய் 67 படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார் என்பது உறுதியாக தெரிகிறது.
ஏற்கனவே, லோகேஷ் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் கொண்டு வந்து படத்தில் மிகபெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அதேபோல் இப்படத்திலும் சியான் விக்ரம் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூறிய லோகேஷ் இப்படம் ஒரு ஆக்ஷன் படமாகவும், திரில்லர் படமாகவும் இருக்கும் என்றும் இப்படத்திற்கான அப்டேட் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


