spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசாந்தனு, அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாந்தனு, அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

சாந்தனு மற்றும் அசோக் செல்வன் கூட்டணியிலான ப்ளூ ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சாந்தனு, அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாந்தனு, அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து அருண் பாலாஜி, பகவதி பெருமாள், தாமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்க கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கிரிக்கெட் – அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் நாளுக்கு நாள் அதிக வசூலையும் பெற்று தந்தது. சாந்தனு, அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!அதன்படி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் விரைவில் ஓடிடிக்கு வர இருக்கிறது. அதன்படி இந்த படம் வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி டென்ட் கொட்டா ஓ டி டி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ