spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாதலர்களின் இன்ஸ்பிரேஷன்.......கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

காதலர்களின் இன்ஸ்பிரேஷன்…….கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

- Advertisement -

1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி கேரளாவில் பிறந்த வர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் பிறந்தது கேரளா என்றாலும் வளர்ந்தது தமிழ்நாட்டில் தான். இவருக்கு இளம் வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை முடித்த கௌதம் மேனன் ராஜீவ் மேனியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதுதான் 1997 இல் வெளியான மின்சார கனவு படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் படித்திருந்தார்.

காதலர்களின் இன்ஸ்பிரேஷன்.......கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
File Photo

பின்னர் தன்னுடன் படித்த சக மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவருடைய படங்கள் பெரும்பாலும் காதல் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், காதலில் கமிட்டாகாமல் இருப்பவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் வகையிலும் இருக்கும். காதலர்களின் இன்ஸ்பிரேஷன்.......கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்!அது மட்டும் இல்லாமல் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி இவரை அடிச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார். வரும் கௌதம் வாசுதேவ் மேனனின் படைப்புகள் மிகவும் அரிதானதாகவும் 2K கிட்ஸ்களுக்கு பேவரைட் ஆனதாகவும் இருக்கிறது. இடை இடையில் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் தனது மன உறுதியை, ஒரு ஊக்கப்படுத்தும் கருவியாக வைத்து என்னை அறிந்தால் போன்ற புகைப்படங்களை கொடுத்தார். காதலர்களின் இன்ஸ்பிரேஷன்.......கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்!அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படமும் ஜோஸ்வா இமை போல் காக்க திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிப்பதிலும் ஆர்வம் உடைய கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வரும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வோம்

MUST READ