spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கேட்டு மறியல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கேட்டு மறியல்!

-

- Advertisement -

 

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கேட்டு மறியல்!

we-r-hiring

மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெற்றிப்பாதையில் பிரம்மயுகம்… தூள் கிளப்பும் மோலிவுட்….

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட 1 சதவீத ஒதுக்கீட்டை அரசாணை படி உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்று திறனாளிகளுக்கு நியமன தேர்வில் விளக்கு அளிக்க வேண்டும். அதே போல தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பார்வை மாற்று திறனாளிகளுக்கென சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் சென்னை மவுண்ட் சாலையை இருபுறமும் மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓடிடி தளத்தில் களமிறங்கும் ஹாரி பாட்டர்… ஏற்பாடுகள் தீவிரம்…

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி காவல்துறையினர், பார்வை மாற்றுத்திறனாளிகள் 50- க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

MUST READ