- Advertisement -
மோலிவுட்டில் பட்டையை கிளப்பும் ஒரு சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி அவர் நடித்து வருகிறார். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பும் கிடைக்கின்றன. நடிகர் மம்மூட்டி சிறந்த மற்றும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் அவர் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் மம்மூட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் தி கோர். மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம்.

பூதகாலம் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற ராகுல் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.




