Homeசெய்திகள்தமிழ்நாடுவிசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம் - திருமாவளவன் அறிவிப்பு

விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு

-

- Advertisement -

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து 3 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

vck

we-r-hiring

ஜாமினில் வெளிவந்து போலீசை நாய்கள் என தரக்குறைவாக பேசி அராஜகம் செய்த திருவண்ணாமலை மாவட்ட விசிக செயலாளர் பகலவன் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் 70 காவலர்கள் சென்னை, விழுப்புரம், போளூர், வந்தவாசி பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், “திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே. எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும்.

அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன.எனவே,இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் அவர்கள் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ