spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉச்ச நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைக்கா நிறுவனம்!

உச்ச நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைக்கா நிறுவனம்!

-

- Advertisement -

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிய தயாரிப்பு நிறுவனம் தான் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ். அதைத்தொடர்ந்து பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருமாறியது. அந்த வகையில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது.உச்ச நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைக்கா நிறுவனம்! கடைசியாக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிஷன், லால் சலாம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் உச்ச நட்சத்திரங்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பெரிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாகி விடுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார சிக்கலில் தள்ளப்படுகிறார்கள். இது நடிகர்களுக்கும் உரிய சம்பளம் வழங்குவதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.உச்ச நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைக்கா நிறுவனம்! படத்தின் பட்ஜெட்டில் பாதித்தொகை நடிகர்களின் சம்பளத்திற்கே ஒதுக்கப்படுகிறது. தொழில்நுட்ப காரணங்களுக்காக செலவிடும் தொகை எதிர்பாராத விதமாக அதிகமாகியும் விடுகிறது. இச்சூழ்நிலையில்தான் பல பெரிய படங்களை கைவசம் வைத்திருக்கும் லைக்கா நிறுவனம் உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ