ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற பிப்ரவரி 10 ஆம் தேதி கடைசிநாளாகும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தவுள்ளதாக பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் தனித்தனியாக அறிவித்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் ஆதரவு அளிக்காமல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அமைதி காக்கிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனியாக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. வேட்பாளரை அறிவிக்க பாஜக தேசிய பொதுச்செயலர் தருண் சுக் நாளை சென்னை வருகிறார்.
