Homeசெய்திகள்இந்தியாபொதுக்கூட்டத்தில் பரிசுடன் வந்த சிறுமிக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்பரைஸ்..!!

பொதுக்கூட்டத்தில் பரிசுடன் வந்த சிறுமிக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்பரைஸ்..!!

-

- Advertisement -

நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு நடுவே பரிசுடன் காத்திருந்த சிறுமிக்கு மேடையில் இருந்த பிரதமர் மோடி சர்பரைஸ் கொடுத்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பணிகளில் பிரதமர் மோடி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

கடந்த வாரம் கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதையடுத்து கடந்த 1ம் தேதி மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றார். ஹூக்ளியில் ரூ. 7200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்காக அர்பணித்தார்.

கடந்த 2ம் தேதி நாடியா மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

அப்போது கூட்டத்துக்கு நடுவே சிறுமி ஒருவர் தான் வரைந்த பூரி ஜெகநாதரின் ஓவியத்தை கையில் தூக்கிக் காட்டியப் படி நின்றிருந்தார். அதை மேடையில் இருந்து கவனித்த மோடி, பாதுகாவலரை அழைத்து சிறுமி இருக்கும் திசையை நோக்கி கைக்காட்டி பேசினார். உடனடியாக கீழே இறங்கிய பாதுகாவலர் சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை வாங்கி வந்து மோடியிடம் கொடுத்தார்.

சிறுமி தந்தை பரிசை பெற்றுக்கொண்ட மோடி, ஓவியத்தை வியந்து பார்த்து சிறுமிக்கு மேடையில் இருந்தவாறு நன்றி கூறினார். அதை பார்த்த பா.ஜ.க தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பிரதமர் மோடியை புகழ்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இப்படியொரு தலைவர் எங்கும் இருக்க மாட்டார், மற்ற கட்சித் தலைவர்களுக்கும் மோடிக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான். மிகவும் எளிமையான தலைவர் மோடி என்று கூறி பலரும் தங்களுடைய சமூகவலைதளப் பக்கங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ