spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்..... பட்டியல் இதோ!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்….. பட்டியல் இதோ!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசின் திரைப்படவிருது வழங்கும் விழா நாளை (மார்ச் 6ம் தேதி)
சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர் மு.கே. சுவாமிநாதன் விருதுகளை வழங்க உள்ளார்.தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்..... பட்டியல் இதோ!

கடந்த 2015 ஆம் ஆண்டில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் தமிழக அரசின் பல விருதுகளை வென்றுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்கான விருது நடிகர் மாதவனுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்கராவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சிறந்த படங்களின் பட்டியலிலும் இறுதிச்சுற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

we-r-hiring

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்..... பட்டியல் இதோ!பின்னர் அதே ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 36 வயதினிலே திரைப்படமானது சிறந்த படங்களின் பட்டியலிலும் சிறந்த நடிகைக்கான பட்டியலில் 36 வயதினிலே படத்திற்காக ஜோதிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்..... பட்டியல் இதோ!

வை ராஜா வை படத்திற்காக கௌதம் கார்த்திக், சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசை
வெல்லப் போகிறார். சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு, இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக ரித்திகா சிங் வெல்லப் போகிறார். மேலும் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்ற அரவிந்த் சாமிக்கு சிறந்த வில்லன் விருது வழங்கப்பட உள்ளது. அஞ்சுக்கு ஒன்னு என்னும் படத்திற்காக சிங்கம் புலிக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்படுகிறது.

அதே சமயம் சிறந்த இசையமைப்பாளராக ஜிப்ரான் சிறந்த ஒளிப்பதிவாளராக ராம்ஜி சிறந்த கதை ஆசிரியராக மோகன் ராஜா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ