spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு - சென்னை மாநகராட்சி

ஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு – சென்னை மாநகராட்சி

-

- Advertisement -
சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு ஏரியா சபைகளின் உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டுக்கும் தலா பத்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த ஏரியா சபை உறுப்பினர்களில் வெறும் 102 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

அதிகபட்சமாக வார்டு 39ல் 5 பெண் உறுப்பினர்களும், வார்டு 44ல் 4 பெண் உறுப்பினர்களும், வார்டு 117ல் 3 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெரும்பாலான வார்டுகளில் 10 உறுப்பினர்களும் ஆண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு, பெண்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Home

மேயர் பிரியா வார்டில் கூட 2 பெண் உறுப்பினர்கள் மட்டுமே ஏரியா சபை உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.

MUST READ