
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக தொடக்கத்தில் இதுவரை இல்லாத ஏற்றம் கண்டனர்.

மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (மார்ச் 06) புதிய உச்சத்தில் முடிந்த நிலையில், இன்று (மார்ச் 07) காலை வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 159 புள்ளிகள் அதிகரித்து வரலாறு காணாத ஏற்றமாக 74,245 புள்ளிகளைத் தொட்டது.
தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டியும் 49 புள்ளிகள் அதிகரித்து 22,523 புள்ளிகள் என புதிய உச்சத்தில் வர்த்தகமானது. இந்த நிலையில் சந்தைகள் தற்போது சிறிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன. மற்ற ஆசிய பங்குச்சந்தைகள் குறைந்து வர்த்தகமாகின்றன. அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று (மார்ச் 06) 2,766 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை வாங்கியுள்ளனர்.
பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!
சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 82.85 டாலரில் வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.