நடிகர் விஜய், நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். திரைத்துறையில் போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவித போட்டியும் இல்லாமல் நல்ல நண்பர்களாக தான் இருக்கின்றனர். இதனை இருவருமே பல இடங்களில் கூறி இருக்கின்றனர்.

தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் சமீபத்தில் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நடிகர் அஜித் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அஜித்துக்கு மூளையில் கட்டி இல்லை மூளைக்கும் காதுக்கும் இடையில் உள்ள நரம்பில் வீக்கம் இருந்ததால் அதனை அகற்றி இருப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி நேற்று காலை சிகிச்சைக்குப் பின் நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் தளபதி விஜய், நடிகர் அஜித்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த வருகிறார். நடிகர் விஜய் தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


