spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'பப்'பில் டான்ஸ் ஆடிய சாய் பல்லவி!

‘பப்’பில் டான்ஸ் ஆடிய சாய் பல்லவி!

-

- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர். அதேசமயம் இவருடைய டான்ஸுக்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
'பப்'பில் டான்ஸ் ஆடிய சாய் பல்லவி!இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் நடித்துள்ளார். அந்த வகையில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. மேலும் நாக சைதன்யா நடிக்கும் தண்டேல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதன்படி அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜப்பானில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதற்காக பட குழுவினர்கள் பார்ட்டிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாய் பல்லவி சக நடிகர்களுடன் இணைந்து செமயாக டான்ஸ் ஆடியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ