நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மைக் மோகன் தான் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அதே சமயம் நடிகர் விஜய் இளமையான தோற்றத்தில் காண்பிக்க டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். அடுத்ததாக படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தான் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது GOAT படத்திலும் விஜய் பாடியிருக்கிறார் என்று அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். விஜய் வழக்கமாக தன்னுடைய படங்களில் ஏதேனும் ஒரு பாடலை பாடியிருப்பார். அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திலும் விஜய் பாடி இருக்கும் தகவல் பாடலின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
- Advertisement -